ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (19) முதல் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் மொத்தம் 999,502 பயனாளி குடும்பங்களின் வங்கி கணக்குகளில் ரூ. 9.241 பில்லியன் நிதி வைப்பிலிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளி குடும்பங்களுக்குச் சுமார் ரூ. 2.322 பில்லியன் கொடுப்பனவுகள் செலுத்தப்பட உள்ளன. அதன்படி, இரண்டு கட்டங்களின் கீழ் ஆகஸ்ட் மாதத்திற்கு 12 லட்சத்திற்கும் அதிகமான பயனாளி குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. நலன்புரி நன்மைகள் சபை, பயனாளிகள் தங்களின் கொடுப்பனவுகள் குறித்துத் தங்களின் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்குகளைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
