Headlines

5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடைத்தாள் மதிப்பீட்டுச் செயற்பாடுகள் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த 2,723 பரீட்சை நிலையங்களில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது.

இப்பரீட்சையின் பெறுபேறுகள் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததில் இருந்து ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *