Headlines

82 வயதில் காலமானார் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி!

இலங்கை இசையுலகின் மூத்த பாடகியும், பல தசாப்தங்களாக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான  நந்தா மாலினி தனது 82வது வயதில் காலமானார். குடும்ப வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

அவரது மறைவு இலங்கை கலை உலகிற்கும், அவரது இரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நந்தா மாலினி அவர்கள், தனது தனித்துவமான குரல் வளம் மற்றும் உணர்வுபூர்வமான பாடும் பாணியால் பல தலைமுறை இரசிகர்களைக் கவர்ந்தவர். தேசபக்தி பாடல்கள், திரைப்பட பாடல்கள் மற்றும் பக்தி பாடல்கள் என பல்வேறு வகைகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியுள்ளார். அவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் இரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *