Headlines

தொழிற்சங்கங்களின் நியாயமற்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது – ஜனாதிபதி

எத்தனை வேலைநிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், தொழிற்சங்கங்களின் நியாயமற்ற கோரிக்கைகளை தற்போதைய சூழ்நிலையில் நிறைவேற்ற முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற ‘வரவு செலவுத் திட்டமும் உழைக்கும் மக்களும்’ என்ற தொனிப்பொருளிலான தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வருமானம் 6,230 பில்லியன் ரூபாவாக உள்ள நிலையில், சம்பளம் மற்றும் கடன் மீள்செலுத்துதல் உள்ளிட்ட செலவினங்கள் 7,035 பில்லியன் ரூபாவாக உள்ளதாகவும், இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய 805 பில்லியன் ரூபாவைக் கடனாகப் பெற வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அரச செலவினங்களை மேலும் அதிகரிப்பதாயின், கூடுதல் கடன்களைப் பெறவோ அல்லது ஏனைய செலவினங்களைக் குறைக்கவோ வேண்டியிருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது மாதாந்தம் 162,500 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி விதிக்கப்படும் நிலையில், அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் வரி வரம்பை மேலும் உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதனை 500,000 ரூபா வரை உயர்த்துவது அரசாங்கத்தின் இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *