இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) இன்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கமைவாக, ஒட்டோ டீசல் (Auto Diesel) லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 382 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஒக்டேன் 92 பெற்றோல் (Petrol 92 Octane) லீற்றர் ஒன்றின் விலையும் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 414 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சுப்பர் டீசல் (Super Diesel), ஒக்டேன் 95 பெற்றோல் (Petrol 95 Octane) மற்றும் மண்ணெண்ணெய் (Kerosene) ஆகியவற்றுக்கான விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என சிபெட்கோ (Ceypetco) மேலும் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட புதிய விலைப் பட்டியல் இதோ:
- ஒட்டோ டீசல் – ரூ. 382 (25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது)
- சுப்பர் டீசல் – ரூ. 478 (மாற்றமில்லை)
- ஒக்டேன் 92 பெற்றோல் – ரூ. 414 (20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது)
- ஒக்டேன் 95 பெற்றோல் – ரூ. 478 (மாற்றமில்லை)
- மண்ணெண்ணெய் – ரூ. 285 (மாற்றமில்லை)
