Headlines

“ஊழல்வாதிகளைத் தண்டிப்பதைத் தடுக்கும் சூழ்ச்சிகளைத் தோற்கடிப்போம்”: ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் திரண்ட நூற்றுக்கணக்கானோர்.

கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ‘ஜனவரமே புரவசியோ’ (Janawarame Purawasiyo) சிவில் அமைப்பின் உறுப்பினர்கள் இன்று (17) பேரணியாக வந்து தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக அப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“திருடர்கள், ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தண்டிப்பதைத் தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் சதித்திட்டங்களைத் தோற்கடிப்போம்” என்ற பிரதான கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீதிகளை முடக்கி முன்னெடுக்கப்படும் பேரணி:

இப் போராட்டத்தின் உறுப்பினர்கள் முதற்கட்டமாகக் கொழும்பு கோட்டை பகுதியில் ஒன்றுகூடி, அங்கிருந்து பேரணியாகக் காலி முகத்திடலை நோக்கி நகர்ந்தனர். பின்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே வீதியை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சட்ட ஒழுங்கையும் பொது நிர்வாகத்தையும் சீர்குலைக்கும் வகையில், வீதிகளை அடைத்துப் பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தும் போக்கு அதிகரித்து வருவதுடன், இது அன்றாடப் பணிகளுக்காகப் பயணிக்கும் பொதுமக்களுக்குப் பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *