Headlines

திடீர் உடல்நலக்குறைவு: கொழும்பு தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (12) காலை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ராஜபக்ஷ, குறுகிய காலத்திற்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து, அவரது தற்போதைய ஆரோக்கிய நிலையை மதிப்பிடுவதற்காக பல வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் (Routine Medical Tests) மேற்கொள்ளப்பட்டன.

அந்த மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் தற்போது வைத்தியசாலையில் வழக்கமான சாதாரண மருத்துவப் பராமரிப்பையும் சிகிச்சையையும் பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *