Headlines

மேல், சபரகமுவ உள்ளிட்ட பல மாகாணங்களில் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

இன்றைய தினம் (12) மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். அத்துடன், வட மாகாணம், வடமத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *