டிபெல்லா மற்றும் ஆணையாளர் ரொபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் எதிர்வரும் செப்டம்பர் 6 முதல் 10 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம், கடல்சார் வர்த்தகம், முதலீடு மற்றும் அமெரிக்க நிறுவனங்களையும் நுகர்வோரையும் இந்து-பசிபிக் பிராந்திய சந்தைகளுடன் இணைக்கும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகள் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகும்.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் கூற்றுப்படி, இந்த அதிகாரிகள் இலங்கை விஜயத்தின் போது, மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் கடல்சார் துறைத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
தலைவர் டிபெல்லா கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் தளவாட மாநாட்டில் உரை நிகழ்த்தவுள்ளதுடன், ஆணையாளர் ஹார்வி ஒரு குழு கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர், சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கொழும்பு துறைமுகம் வழியாகச் செல்லும் கொள்கலன்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை உலகின் பிற இடங்களுக்குச் செல்வதாகவும், இது இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் முக்கிய பங்கைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விஜயம், அமெரிக்க வணிகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதோடு, இலங்கையின் பிராந்திய மைய நிலையை வலுப்படுத்தி, இரு நாடுகளின் பொருளாதார செழிப்பிற்கும் பங்களிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
