இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழையும், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேல், சபரகமுவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாகப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வானிலை மாற்றங்கள் ஏற்படும் போது அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
