சுப்ரீம்செட் (SupremeSAT) செயற்கைக்கோள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவிடம் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு (FCID) வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் நான்கு மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர், ரோஹித ராஜபக்ஷ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.
