Headlines

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பில் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 31 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்குச் சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *