Headlines

இன்றைய வானிலை அறிக்கை 13.06.2026

மழை மற்றும் இடியுடன் கூடிய மழை:

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் (mm) வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சில தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்று:

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது 40-50 கிலோமீட்டர் (kmph) வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

தீவின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது 30-40 கிலோமீட்டர் (kmph) வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கை:

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில், தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *