Headlines

இலங்கை ஜிம்னாஸ்டிக் துறைக்கு புதிய உத்வேகம்: தாய்நாட்டிற்காக விளையாட முன்வந்த டயானா சுமனசேகர!

இலங்கை-அமெரிக்க உடற்பயிற்சி வீராங்கனையான டயானா சுமனசேகர, இனி இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இத்தீர்மானம் தனது தொழில்வாழ்க்கையில் ஒரு பெருமையான மற்றும் உணர்ச்சிகரமான மைல்கல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள ஒரு செய்தியில், சுமனசேகர தனக்கு எப்போதுமே உடற்பயிற்சி மீது ஆழ்ந்த ஆர்வம் இருப்பதாகவும், அதன் முதல் நாளிலிருந்தே விளையாட்டைக் காதலித்ததாகவும் கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்க அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியமை தமக்கு ஒரு கௌரவமாகும் எனக் குறிப்பிட்ட அவர், அந்தப் பயணம் தமக்கு அளித்த வாய்ப்புகளுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்காகப் போட்டியிடுவது “நிச்சயமாக ஒரு கனவு நனவாகும்” எனக் குறிப்பிட்ட சுமனசேகர, நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது தனது பாரம்பரியத்தைக் கௌரவிக்கவும், இலங்கை மற்றும் தெற்காசியாவில் உடற்பயிற்சி விளையாட்டுக்கு அதிக வாய்ப்பளிக்கவும் பங்களிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

“ஒரு இலங்கை அமெரிக்கராக, எனது இதயம் இரு நாடுகளுக்கும் சொந்தமானது என்பதில் எப்போதும் பெருமைப்படும்” என்று அவர் ஆதரவாளர்களுக்கு நன்றித் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் வாய்ப்புகளுக்காகத் தாம் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *