Headlines

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போல் நடித்து பண மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHIs) போல் நடித்து, வீடுகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து ஏமாற்றிப் பணம் பறிக்கும் மோசடிச் கும்பல் குறித்துத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தச் சங்கத்தின் பதிலாய்வுத் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கையில், டெங்கு ஒழிப்புப் பரிசோதனை நடவடிக்கைகளைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இந்த மோசடியாளர்கள், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எனக் கூறி பொதுமக்களிடம் பணம் கோருவதாகக் குறிப்பிட்டார்.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தங்களது உத்தியோகபூர்வ கடமைகளுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணம் வசூலிப்பதோ அல்லது ஏற்றுக்கொள்வதோ இல்லை. எனவே, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் என அடையாளப்படுத்திக்கொண்டு பணம் கோரும் எவருக்கும் பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், யாரேனும் நபர் தம்மைக் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எனக் கூறி, கடமைகள் தொடர்பாகப் பணம் கோரினால், அது குறித்து உடனடியாகப் பொலிஸாருக்கு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் உபுல் ரோஹண மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *