Headlines

லொக்கு பெட்டியின் தம்பி மீது துப்பாக்கிப் பிரயோகம்: பலப்பிட்டி வைத்தியசாலையில் உயிரிழப்பு

தென்பகுதி பாதாள உலகக் குழு மற்றும் முன்னணி குற்றவாளியாகக் கருதப்படும் ‘லொக்கு பெட்டி’ (Loku Patty) என்பவரின் இளைய சகோதரர் அஹுங்கல்ல, வெலிகந்த பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று (01) இரவு 8.10 மணியளவில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியொருவர் 9mm ரக கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது வீட்டின் அருகே வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர் உடனடியாக பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் லந்துவாஹந்தி சுகத் நுவன் குமார டி சில்வா (Lanthuwahandi Sugath Nuwan Kumara de Silva) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் 35 வயதுடையவர் எனவும் பொலிஸார் அதிகாரபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தப்பியோடியுள்ள துப்பாக்கிதாரியைக் கைது செய்வதற்காகவும், இந்தச் சம்பவம் குறித்தும் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *