Headlines

மகளிர் உலகக் கிண்ணம்: வங்கதேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி – முதலில் துடுப்பாட்டம்!

கொழும்பு: கொழும்பில் இன்று (02) ஆரம்பமாகும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டியில், வங்கதேசத்திற்கு எதிராக, பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுவாகும். இந்த இரு அணிகளும், பாகிஸ்தானில் நடைபெற்ற தகுதிகாண் தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தே, இந்த உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதி பெற்றன. 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இவ்விரு அணிகளும் மோதியபோது, வங்கதேச அணி பாகிஸ்தானை வீழ்த்தித் தமது முதல் உலகக் கிண்ண வெற்றியைப் பதிவு செய்தது. எனவே, இன்றைய சர்வதேச கிரிக்கெட் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *