Headlines

2025 (2026) சாதாரண தரப் பரீட்சை விண்ணப்ப முடிவுத் திகதி அறிவிப்பு: கால நீடிப்பு வழங்கப்படாது!

கொழும்பு: 2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான நிகழ்நிலை (online) விண்ணப்பங்களைக் கோரும் காலம், எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒக்டோபர் 9ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர், நிகழ்நிலை விண்ணப்ப முறைமை செயலிழக்கச் செய்யப்படும். எக்காரணம் கொண்டும் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட மாட்டாது என திணைக்களம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. எனவே, விண்ணப்பதாரிகள் இறுதித் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான மேலதிக கல்விச் செய்திகள் மற்றும் விபரங்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தைத் தொடர்புகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *