சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை 2025 தொடரில், இந்திய அணிக்கு எதிராக நிஷங்கா சதம் (107) அடித்து அசத்தினார். அவரது ஆட்டம், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு ஏற்ற வகையில் இருப்பதாலும், அவர் சுழற்பந்து வீச்சைத் திறமையாகக் கையாள்வதாலும், சிஎஸ்கே அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படாத நிஷங்காவுக்கு, இம்முறை மும்பை, கொல்கத்தா அணிகளிடமிருந்தும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செய்தி, கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை வீரர் பதும் நிஷங்காவை வாங்க சிஎஸ்கே திட்டம்?
சென்னை: ஐபிஎல் 19ஆவது சீசனுக்கான மினி ஏலத்தில், ஃபார்ம் அவுட்டில் இருக்கும் டிவோன் கான்வேயை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக இலங்கைத் தொடக்க வீரர் பதும் நிஷங்காவை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
