வரலாற்றில் முதல் முறையாக 22,000 புள்ளிகளைக் கடந்த கொழும்புப் பங்குச் சந்தை!
கொழும்பு: இன்று (03) காலை வர்த்தக அமர்வின்போது, கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI), அதன் வரலாற்றில் முதல் தடவையாக 22,000 புள்ளிகள் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளது.
இன்று காலை சுமார் 9:35 மணியளவில், சுட்டெண் 22,017.56 புள்ளிகளாகப் பதிவாகியது.
சமீப நாட்களாகத் தொடர்ச்சியாக புதிய வரலாற்று உச்சங்களைப் பதிவு செய்துவரும் பங்குச் சந்தையின் இந்த அபார வளர்ச்சி, நாட்டின் பொருளாதார மீட்சி மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.
