Headlines

உள்ளூர் உற்பத்தியாளர்களின் ‘சிலோன் சந்தை’கண்காட்சி ஆரம்பம்

கொழும்பு: “சிலோன் சந்தை” (Ceylon Fair) என்ற பெயரிலான வர்த்தகக் கண்காட்சி, கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள சுதர்ஷி மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பொருட்காட்சி, எதிர்வரும் திங்கட்கிழமை (06) வரை நடைபெறவுள்ளது. இதில், பாதணிகள், ஆடைகள், நினைவுப் பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திகள் விசேட தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்தக் கண்காட்சி, பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் பொருட்களைக் கொள்வனவு செய்ய ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *