Headlines

மேல், சப்ரகமுவ உள்ளிட்ட 4 மாகாணங்களுக்குக் கனமழை எச்சரிக்கை: 75 மி.மீ. மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!

கொழும்பு: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இன்று (10) பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள் மற்றும் வடக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *