கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சியுடன் (ஐ.தே.க.) ஒரு கூட்டுத் திட்டத்தின் கீழ், அரசியல் ரீதியாக ஒத்துழைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) தீர்மானித்துள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இருப்பினும், இந்த ஒத்துழைப்பு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் அமையும் எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று (09) இந்த ஏகமனதான முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறினார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாச, இரு கட்சிகளும் தமது தனிப்பட்ட அடையாளங்களைப் பேணியவாறு, நாட்டின் சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், நடைமுறைச் சாத்தியமான மற்றும் மக்கள் மையக் கொள்கை உடன்பாடுகளில் இணைந்து செயற்படும் என்றார்.
