Headlines

மின் கட்டண உயர்வு இல்லை: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பால் மக்கள் நிம்மதி!

கொழும்பு: இந்த காலாண்டில் மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று (14) அறிவித்துள்ளது. இதனால், அடுத்த மூன்று மாதங்களுக்கு தற்போதைய மின்சாரக் கட்டணங்களே தொடரும்.

பொதுமக்கள் கலந்தாலோசனைகள் மற்றும் மின்சாரக் கணக்கீட்டு முறைகள் குறித்த மீளாய்வைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்தார்.

முன்னதாக, 2025ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டிற்காக, மின்சாரக் கட்டணத்தை 6.8% ஆல் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை (CEB) முன்மொழிந்திருந்தது. அந்த முன்மொழிவு மீதான பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்ற பின்னரே, ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *