Headlines

காலநிலை தீவிரம் அடைகிறது: 6 மாகாணங்கள், 1 மாவட்டத்திற்கு 100 மி.மீ. கனமழை எச்சரிக்கை!

கொழும்பு: தீவைச் சூழவுள்ள வளிமண்டலக் குழப்பங்கள் மற்றும் பூமத்திய ரேகைக்கு அருகாமையில் காற்றுக்கள் சந்திக்கும் வலயத்தின் (ITCZ) செல்வாக்கு காரணமாக, இலங்கையின் வானிலை இன்று (15) முதல் அடுத்த சில நாட்களுக்குத் தீவிரம் அடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். இதேவேளை, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *