Headlines

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

கொழும்பு, அக். 15 : முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகியிருந்த நிலையில், இந்த திடீர் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தான் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்து, அவர் சமீபத்தில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எதிர்பார்ப்புப் பிணை கோரி மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்த நிலையிலேயே, ஆணைக்குழு அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், அவர் எவ்விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தத் திடீர் கைது நடவடிக்கை, நாட்டின் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *