கொழும்பு: கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத் தலைவர், சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, நீதிமன்ற வளாகத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரை வாய்மொழியாக நிந்தித்த மற்றும் அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இன்று மாலை நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இதன்போது, சந்தேகநபரைத் தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், சந்தேகநபர் சாட்சிகளை அச்சுறுத்தவோ அல்லது செல்வாக்குச் செலுத்தவோ முயற்சித்தால், அவரது பிணை இரத்துச் செய்யப்படும் என்றும் நீதவான் மேலும் உத்தரவு பிறப்பித்தார்.
கூடுதலாக, சந்தேகநபர் நாளை காலை 9 மணிக்கு முன்னர் மேல் மாகாண தென் பிராந்திய குற்றப்பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
