Headlines

அவசர அறிவிப்பு: கொழும்பில் நாளை 10 மணி நேர நீர் வெட்டு! (Oct 23)

கொழும்பு, ஒக்டோபர் 22: கொழும்பு மற்றும் அதன் சூழவுள்ள பல பகுதிகளில் நாளை (ஒக்டோபர் 23), காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பாதிக்கும் மின் தடங்கல் காரணமாகவே இந்த நீர்ப்பகிர்மானத் தடை ஏற்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்படும் பகுதிகள்

இந்த 10 மணி நேர நீர் வெட்டினால் கொழும்பு நகரில் 1 முதல் 15 வரையான பிரதான பகுதிகள் உட்படப் பல புறநகர்ப் பகுதிகள் பாதிக்கப்படும்.

பாதிக்கப்படும் முக்கிய பகுதிகள்:

  • கொழும்பு 1 – 15 வரையிலான பகுதிகள்
  • பத்தரமுல்லை, மிரிஹானை, மாதிவெல
  • நுகேகொட, நாவல, கொலன்னாவ
  • ஐ.டி.எச் (IDH), கோட்டிகாவத்தை, அங்கொட
  • வெள்ளம்பிட்டிய, ஒருகொடவத்தை, மகரகம, மற்றும் பொரலெஸ்கமுவ

ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், இந்த நீர்த் தடையைக் கருத்தில் கொண்டு, தேவையான நீரைக் கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *