கொழும்பு – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) எரிபொருள் விலைகளை நேற்று (ஒக்டோபர் 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 294 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 318 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒக்டேன் 95 பெட்ரோல், ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட விலைப் பட்டியல்:
- ஒக்டேன் 92 பெட்ரோல்: ரூ. 294 (ரூ. 5 குறைப்பு)
- சுப்பர் டீசல்: ரூ. 318 (ரூ. 5 அதிகரிப்பு)
- ஒட்டோ டீசல்: (மாற்றமில்லை)
- ஒக்டேன் 95 பெட்ரோல்: (மாற்றமில்லை)
- மண்ணெண்ணெய்: (மாற்றமில்லை)
