கொழும்பு – மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (நவம்பர் 07) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். அப்பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
