கொழும்பு – அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் (நவம்பர் 07) நிறைவடைவதாக கல்வி அமைச்சு (MOE) அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் தகவல்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி ஆரம்பமாகும்.
அதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
