வாகன இறக்குமதி: $1,363 மில்லியன் பெறுமதியான வாகனங்கள் ஏற்கனவே இறக்குமதி – ஜனாதிபதி
(பி.ப. 02:28) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது பாதீட்டு உரையில், அதிக கவனம் செலுத்தப்படும் துறைகளில் ஒன்றான வாகன இறக்குமதி தொடர்பான புள்ளிவிபரங்களை சபையில் வெளியிட்டார்.
“இந்த ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையில், வாகன இறக்குமதிக்காக 1,333 மில்லியன் அமெரிக்க டொலர் (USD 1,333 million) பெறுமதியான கடன் கடிதங்கள் (LCs) திறக்கப்பட்டுள்ளன,” என ஜனாதிபதி தெரிவித்தார்.
“மேலும், ஏற்கனவே 1,363 மில்லியன் அமெரிக்க டொலர் (USD 1,363 million) பெறுமதியான வாகனங்கள் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன,” என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தரவுகள், வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள அந்நியச் செலாவணியின் அளவை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.
