(பி.ப. 02:55) நாட்டின் விவசாயத் துறையை வலுப்படுத்தும் முக்கிய அறிவிப்பொன்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது சபையில் வெளியிட்டுள்ளார்.
“விவசாயிகளுக்கான நிதி வசதிகளை இலகுபடுத்தும் நோக்கில், ‘நிலையான விவசாயக் கடன் நிதி’ (Sustainable Agricultural Loan Fund) ஒன்றை ஸ்தாபிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது,” என ஜனாதிபதி அறிவித்தார்.
“இந்த புதிய நிதியத்தை நிறுவுவதற்காக 800 மில்லியன் ரூபா (Rs. 800 million) ஒதுக்கீடு செய்யப்படுகிறது,” என்றும் அவர் தனது பாதீட்டு உரையில் குறிப்பிட்டார். இந்த நிதி, விவசாயிகளுக்குத் தேவையான கடனுதவிகளை நிலையான அடிப்படையில் வழங்குவதற்கும், அவர்களை கடன் பொறிகளிலிருந்து மீட்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
