கொழும்பு, மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது பதுங்கியுள்ள ஏழு இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற “ரட்டம் எக்கட்ட” தேசிய போதைப்பொருள் ஒழிப்புப் பிரச்சாரத்தின் கீழ் கொழும்பு மாவட்ட நடவடிக்கையில் பங்கேற்ற போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
