Headlines

சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 19 வரை நீட்டிப்பு!

கொழும்பு: ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை, எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.

‘அரகலய’ போராட்டத்தின்போது அழிக்கப்பட்ட, மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த தனது அரசியல் அலுவலகத்திற்காக, 88.5 இலட்சம் ரூபாயை (8.85 மில்லியன்) நட்டஈடாகப் பெற்றுக்கொண்டதன் மூலம், ஊழல் குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *