கொழும்பு: இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங் (Qi Zhenhong), முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (12) கொழும்பில் சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
சமீபத்தில் பிணையில் விடுதலையான முன்னாள் ஜனாதிபதியை, வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எவ்வாறாயினும், சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்த மேலதிகத் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
