கொழும்பு, நவம்பர் 28: அனுராதபுரம்-புத்தளம் வீதியில் உள்ள கலாவெவ பாலத்தில், வெள்ள நீர் மட்டம் உயர்ந்ததன் காரணமாக, சுமார் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது.
இந்தப் பஸ் சுமார் ஒன்றரை மணித்தியாலங்களாக அந்த இடத்திலேயே சிக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்று (நவம்பர் 28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, “அனுராதபுரத்தில் நடந்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்தைத் தொடர்ந்து செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்ட போதிலும், அது மேலும் பயணித்துச் சிக்கிக்கொண்டது. தற்போது அதில் 60 பேர் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு இராணுவக் குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன, மேலும் ஒரு ஹெலிகாப்டரும் கோரப்படும்” என்று கூறினார்.
