கொழும்பு, டிசம்பர் 01: ‘டிட்வா’ புயல் காரணமாகப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை (AUD 1 Million) வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணமாகப் பயன்படுத்தப்படும் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
