கட்டுநாயக்க விமான நிலையத்தில் 8.5 கோடி ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ கஞ்சா மீட்பு: இந்தியர் கைது!
கட்டுநாயக்க: கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இந்தியப் பிரஜை ஒருவர் பெருமளவிலான குஷ் கஞ்சாவுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் (PNB) கைது செய்யப்பட்டுள்ளார்.
33 வயதான குறித்த சந்தேகநபர், தாய்லாந்திலிருந்து இந்தியாவிற்குப் பயணித்துக்கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து, 85 மில்லியன் ரூபாய் (8.5 கோடி) பெறுமதியான 8.542 கிலோகிராம் குஷ் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
