Headlines

அமெரிக்கத் தாக்குதலில் வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோ கைது! – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு; கராகஸில் குண்டுமழை.

கராகஸ்/வாஷிங்டன், ஜனவரி 03: வெனிசுவேலா (Venezuela) மீது அமெரிக்கா நடத்திய பாரிய அளவிலான தாக்குதல் வெற்றி பெற்றுள்ளதாகவும், அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

பரபரப்புச் சம்பவத்தின் முக்கிய விபரங்கள்:

  • மதுரோ கைது: அமெரிக்கச் சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் போது, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிடிக்கப்பட்டு, விமானம் மூலம் வெனிசுவேலாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
  • டிரம்ப் அறிவிப்பு: தனது சமூக வலைத்தளத்தில் இதனை உறுதிப்படுத்திய டிரம்ப், இது தொடர்பான மேலதிக விபரங்களை இன்று காலை 11.00 மணிக்கு (உள்ளூர் நேரம்) மார்-அ-லாகோவில் (Mar-a-Lago) நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
  • கராகஸில் குண்டுவெடிப்பு: முன்னதாக, வெனிசுவேலா தலைநகர் கராகஸில் (Caracas) இன்று அதிகாலை 1.50 மணியளவில் சக்திவாய்ந்த தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. அரசு அலுவலகங்கள் மற்றும் ராணுவ நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  • சேதங்கள்: கராகஸ் மட்டுமின்றி மிராண்டா, அரகுவா மற்றும் லா குவைரா மாநிலங்களிலும் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால் கரும்புகை சூழ்ந்ததுடன், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
  • பின்னணி: வெனிசுவேலாவில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகள் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி வந்த டிரம்ப், அங்குத் தரைவழித் தாக்குதல்கள் நடத்தப்படும் என முன்னரே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *