Headlines

ஆசியக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் உத்தேச ஆடும் லெவன்

துபாய்: கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளான இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும், ஆசியக் கோப்பை T20 தொடரின் முக்கிய லீக் ஆட்டத்தில் இன்று (14) மோதுகின்றன. 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவரும் இல்லாமல் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்ளும் முதல் T20 போட்டி இதுவாகும். இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, இந்தப் போட்டியில் சுழற்பந்து வீச்சை மையப்படுத்தியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா ஒரே ஒரு சிறப்பு வேகப்பந்து வீச்சாளராகவும், குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களாகவும் இடம்பெறுவர் எனத் தெரிகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் பணியை ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே மேற்கொள்வார்கள். துடுப்பாட்டத்தில், அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாகவும், சஞ்சு சாம்சன் மூன்றாவது வீரராகவும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கிரிக்கெட் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *