Headlines

நாளை (21) பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்! அடுத்த விடுமுறை எப்போது? – கல்வி அமைச்சு அறிவிப்பு.

கொழும்பு, ஜனவரி 20, 2026: 2026 ஆம் கல்வியாண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாவது தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (21) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

‘டிட்வா’ சூறாவளி (Cyclone Ditwah) காரணமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் (A/L) பரீட்சை பாடங்களை நடத்துவதற்காக, கடந்த ஜனவரி 10 ஆம் திகதி முதல் இன்று (20) வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. முன்னதாக, முதலாம் தவணையின் முதல் கட்டம் ஜனவரி 5 முதல் 9 வரை நடைபெற்றது.

நாளை ஆரம்பமாகும் இந்த இரண்டாம் கட்டக் கற்றல் செயற்பாடுகள் பெப்ரவரி 13, 2026 வரை தொடரும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அடுத்த விடுமுறை: அதனைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையை முன்னிட்டு, பெப்ரவரி 14 முதல் மார்ச் 2 வரை பாடசாலைகள் மீண்டும் மூடப்படும்.

அதேவேளை, ரமழான் பண்டிகையைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் பாடசாலைகள் பெப்ரவரி 14 முதல் மார்ச் 22 வரை நீண்ட காலத்திற்கு மூடப்பட்டிருக்கும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *