ராஜபக்ஷக்களை மட்டுமல்ல, அச்சுறுத்தலான அனைவரையுமே அரசு பழிவாங்குகிறது”: மஹிந்த
கொழும்பு: தற்போதைய அரசாங்கம், ராஜபக்ஷ குடும்பத்தை மட்டுமல்லாது, தமக்கு அச்சுறுத்தலாகக் கருதும் அனைவரையுமே பழிவாங்கி வருவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். தனது உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய பின்னர், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“எனது அரசியல் நடவடிக்கைகள் தொடர்கின்றன. எதிர்காலத்தில் காற்றின் திசை மாறலாம், ஆனால் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என அவர் தெரிவித்தார். தனது நெருங்கிய சகாக்கள் சிறையில் அடைக்கப்படுவதும், இந்த பழிவாங்கல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே எனவும் அவர் கூறினார்.
30 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது ஒரு கூட்டு முயற்சி எனத் தெரிவித்த அவர், இளைஞர்கள் தமது உரிமைகளுக்காகப் போராட வேண்டும், ஆனால் காரணமின்றி அரசாங்கத்தைத் தூண்டிவிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.
