முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் عقமனைவி ஷிரந்தி ராஜபக்ச, இன்று (27) நிதி குற்றப் புலனாய்வு பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு சமூகமளிக்கவில்லை.
தனிப்பட்ட காரணங்களினால் இன்று முன்னிலையாக முடியாது என அவர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
இரண்டு வார கால அவகாசம்
இது தொடர்பாகத் கருத்துத் தெரிவித்த பொலிஸார், நிதி குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காகத் தனக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறு ஷிரந்தி ராஜபக்ச எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
ஏற்கனவே ‘சிறிலிய’ (Siriliya) வங்கி கணக்கு தொடர்பான விசாரணைகளுக்காக அவர் இன்று காலை 9.00 மணிக்கு அழைக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.
