பதவியிலிருந்த கணக்காய்வாளர் நாயகம் ஓய்வுபெற்ற பின்னர், அந்த இடத்திற்கு நிரந்தரமான ஒருவரை இதுவரை நியமிக்க முடியாமல் போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். புதிய நியமனம் தாமதமாவதால், அரசின் நிதி முகாமைத்துவம் குறித்துப் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை எழுப்பி வருவதாகவும், இது தேவையற்ற முரண்பாடுகளை உருவாக்கக் கூடும் எனவும் அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரச நிதி முகாமைத்துவத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் இந்தப் பொறுப்புமிக்க பதவிக்கு, கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு வெளியேயுள்ள ஒருவரை நியமிப்பது முற்றிலும் பொருத்தமற்றது என மஹாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, கணக்காய்வாளர் திணைக்களத்தில் நீண்ட கால அனுபவத்துடன் சேவை புரிந்து வரும் மூத்த அதிகாரியான தர்மபால கம்மன்பிலவை (Dharmapala Kammanpila) கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதே மிகவும் உகந்தது என அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்த நடவடிக்கை, ஜனாதிபதி முன்னெடுத்து வரும் நாட்டைச் செழிப்பாக்கும் கொள்கை மற்றும் செயல் திட்டங்களுக்குக் கூடுதல் வலுச்சேர்க்கும் என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
