KPY பாலாவின் உதவிப் பணத்திற்குப் பின்னால் யார்? – கூல் சுரேஷின் பேச்சால் சர்ச்சை!
சென்னை: நகைச்சுவை நடிகர் கேபிஒய் பாலா செய்துவரும் சமூக உதவிகளுக்கான பணத்தின் மூலம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நடிகர் கூல் சுரேஷ் பேசியிருப்பது, திரைப்பட உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய கூல் சுரேஷ், “இலவச மருத்துவமனை கட்டும் அளவிற்கு பாலாவுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது? அவர் ஒன்றும் ராஜ பரம்பரை இல்லை. அவருக்குப் பின்னால் யாரோ இருக்கிறார்கள், அதை விசாரிக்க வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.
ஆனால், “நான் யாரிடமும் உதவி பெற்று மற்றவர்களுக்கு வழங்குவதில்லை, எனது சொந்த சம்பாத்தியத்திலிருந்தே உதவுகிறேன்,” என பாலா சமீபத்தில் நடந்த ‘காந்தி கண்ணாடி’ பட விழாவில் தெளிவுபடுத்தியிருந்தார். இந்நிலையில், கூல் சுரேஷின் பேச்சுக்கு, “உதவி செய்பவர்களையும் சந்தேகப்படுவீர்களா?” என இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
