அகுரேகொட (Akuregoda) பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
அகுரேகொடவில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கெட் (Supermarket) ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றில் இருந்த இருவர் மீதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
