அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, இன்று (18) புதன்கிழமை கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, பின்வரும் பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது:
- மொரட்டுவை
- இராவத்தாவத்தை
- சொய்சாபுர
- இரத்மலானை
- தெஹிவளை
- கல்கிசை
- வெள்ளவத்தை
- பாமன்கடை
- முல்லேரியா
- கொலன்னாவ
இதேவேளை, இந்தத் திடீர் கோளாறு காரணமாக பத்தரமுல்லைப் பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் சபை மேலும் தெரிவித்துள்ளது.
