Headlines

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (09) காலை கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் 243.8 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களைச் சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழேயே சஜின் வாஸ் குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோத சொத்துக் குவிப்பு தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (09) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்குச் சென்றபோதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *