Headlines

இலங்கை தென்கடலில் போதைப்பொருள், ஆயுதங்களுடன் படகு பறிமுதல்

இலங்கை கடற்படையினரால் தென் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த படகிலிருந்து கைப்பற்றப்பட்ட மூட்டைகளில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடற்படைப் பேச்சாளர் கருத்துப்படி, மேலதிக விசாரணைக்காக குறித்த படகு தற்போது கரைக்கு கொண்டுவரப்பட்டு வருகின்றது.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இலங்கை நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் கடற்படையினர் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கைப்பற்றப்பட்டமை தொடர்பான மேலதிக தகவல்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *